Thursday, May 31, 2012
Wednesday, May 30, 2012
எத்தனையோ நினைவுகள்.................
7:53 PM
No comments
அன்பே புரியவில்லை இன்னும்
ஏன் என்று........
அன்று உன்னை சந்தித்த அந்த நிமிடம் எப்படி
என்னுள் வந்தாய்....
உன்னருகே இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
என்னையல்லவா
இழந்துவிட்டேன்....
நேற்று வரை சரியென்றாய்
ஆனால் இன்று
புரியவில்லையே உன் மனதை....
நினைவுகளே ஒர் சங்கீதம் தான்
எத்தனையோ நினைவுகள் ஒளிராமலே
கருகிப் போய்விட்டன....
காத்திருந்தேன் - நீ வரும் வரை
புரிந்துக்கொண்டேன்
இன்று நீ என்மேல் கொண்ட காதலை
என் கல்லறை முன்னால்
மனம் திறந்து நீ அழுத போது.......
Thursday, May 17, 2012
உண்மைக் காதல்...........
5:07 AM
No comments
அன்பே!
நான் காதலித்ததும்
காதலித்துக் கொண்டிருப்பதும்
என்றுமே உன்னை மட்டும்தான்
முதல் காதல் இது
முடிவில்லாத காதலும் இதுதான்
அழகைப் பார்த்துவரவில்லை காதல்
பணத்தைப் பார்த்துவரவில்லை காதல்
உன் தூய்மையான அன்பை மட்டுமே
பார்த்து வந்ததுதான் காதல்!
எத்தனை பேர் உறவென்று வந்தாலும்
உன் ஒருவனின் நினைவு மட்டுமே
என் இதயத்தில் என்றென்றும்
அழியாமல் என் உயிர் பிரியும் வரை
கூடவே வரும் இதுதான் உண்மைக் காதல்
Wednesday, May 16, 2012
Tuesday, May 15, 2012
Monday, May 14, 2012
Sunday, May 13, 2012
நினைவுகள்
2:02 AM
No comments
நேரம் நிற்பதும் இல்லை
தூரம் குறைவதும் இல்லை.....
பாரமான இவ்வுலகில்
பறந்து செல்லும் பறவைகளில்
பாதியாவது நான் இருக்க வேண்டும்
நிறமே இல்லாத நீரினில்
நீந்தித் திரியும் மீன்களில்
ஒரு நிமிடமாவது எனக்கு வேண்டும்
கரைத்து விட முடியாத
கவிதைகளை சுமந்து வரும் காற்றினில்
கதை பேசும் கணங்கள் வேண்டும்....
கடைசி வாழ்க்கையை
கல்லறையில் கடந்து கொண்டிருக்கும்
கருணையுள்ள உள்ளங்களின்
மௌனம் வேண்டும்......
அனைத்தையும் விட
அழகான அந்தி மழையில்
அரை நிமிடம் அமர்ந்திருக்க வேண்டும்....
ஆயுள் முடியும் வரை கூட.....
என் ஆசைகளின் ஒரு வரி தான்
இந்த வார்த்தைகளே இல்லாத கவிதை....
ஆனால், என் மொத்த ஆசைகளையும்
அடக்கி விட எழுத்துக்களும் இல்லை
எழுதுகோலும் இல்லை....





























